2026 மே 07, வியாழக்கிழமை

கிழக்கு பல்கலை உபவேந்தர் கௌரவிப்பு

Kogilavani   / 2012 ஏப்ரல் 16 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்னன் கோவிந்தராஜாவை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

சம்மேளனத்தின் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி கிட்னன் கோவிந்தராஜா மற்றும் சம்மேளனத்தின் பிரதி தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத் உட்பட கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதிகள் சம்மேளன முக்கியஸ்த்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி கிட்னன் கோவிந்தராஜாவுக்கு சம்மேளனத்தினால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதிகளும் கௌரவிக்கப்பட்டனர்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .