2026 மே 07, வியாழக்கிழமை

கிழக்கு மாகாண சபை கீதத்தை இசையமைப்பதற்காக உறுப்பினர்கள் குழுவொன்று இந்தியாவிற்கு விஜயம்

Kogilavani   / 2012 ஏப்ரல் 17 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

கிழக்கு மாகாண சபைக்கான கீதத்திற்கு இந்திய இசையமைப்பாளர்களை கொண்டு இசையமைப்பதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் குழுவொன்று இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்தியா பயணமானது.

கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் எச்.எம்.பாயிஸ் தலைமையில் சென்றுள்ள இக்குழுவில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.புஸ்பராஜா, இரா.துரைரட்னம், எம்.எஸ்.ஜவாஹிர்சாலி, நிமால் காமினி, எம்.எல்.துல்கர்னைன், உட்பட  சபையின் செயலாளர் ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.

இக் குழுவினார் இந்திய இசையமைப்பாளர்களை சந்தித்து கிழக்கு மாகாண சபைக்கான கீதத்தை இசையமைக்கவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாஹிர்சாலி தெரிவித்தார்.

கிழக்கு மாகாண கவிஞர்கள், எழுத்தாளர்களை கொண்டு மேற்படி கீதம் இயற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .