2026 மே 01, வெள்ளிக்கிழமை

புகைத்தல் எதிர்ப்பு தினத்தையொட்டி மட்டக்களப்பில் பேரணி

Suganthini Ratnam   / 2012 மே 31 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி,ஜிப்ரான்,ஸரீபா)


சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தையொட்டி  மட்டக்களப்பு மாவட்டத்தின்  பல்வேறு பகுதிகளிலும் புகைத்தல் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணிகள் இன்று வியாழக்கிழமை நடைபெற்றன.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலும் கல்லடிப் பிரதேசத்திலும் இப்பேரணிகள்  நடைபெற்றன.

மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேரணியில்  மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் பி.குணரட்னம், சமுர்த்தி அதிகார சபையின் வாழ்வாதார பணிப்பாளர் எம்.நடேசராசா, மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் எஸ்.மனோகிதராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கல்லடி சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ஜெயதாசின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற  பேரணியில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி ஆணையாளர் பி.குணரட்ணம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதேவேளை, சர்வதேச  புகைத்தல் எதிர்ப்பு தினத்தையொட்டி  கொடிவாரம் இன்று வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 10ஆம் திகதிவரை 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. சமுர்த்தி சமூக அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் சமுர்த்தி அதிகார சபை இக்கொடி வாரத்தினை நடத்துகின்றது.

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள  குடும்பங்களுக்கு கூரைத்தகடுகளும் மாணவர்களுக்கு சைக்கிள்களும் வழங்கும் வைபவம் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

இப்பிரதேச செயலகப் பிரிவில் கடந்த வருடம் புகைத்தல் எதிர்ப்பு தினத்தில் சேகரிக்கப்பட்ட நிதியில்  16 மாணவர்களுக்கான சைக்கிள்களும் கூரைத்தகடுகளும் வழங்கிவைக்கப்பட்டன.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சமுர்த்தி சமூக அபிவிருத்தி மண்றத்தின் ஏற்பாட்டில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிறிதரன் தலைமையில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதி பணிப்பாளர் பி.குணரட்னம், மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .