2026 மே 01, வெள்ளிக்கிழமை

பப்புவா நிவ்கினி நாட்டு அமைச்சர் மெக்கேரா மொராட்டா காத்தான்குடிக்கு விஜயம்

Suganthini Ratnam   / 2012 ஜூன் 02 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


பப்புவா நிவ்கினி நாட்டின் அரச கூட்டுத்தாபனங்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மெக்கேரா மொராட்டா நேற்று வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடிக்கு விஜயம் செய்தார்.

பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் அழைப்பின் பேரில் காத்தான்குடிக்கு விஜயம் செய்த இவர், ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடைபெற்ற கரையோர பாலர் பாடசாலைகளுக்கான உபகரணங்கள் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டார்.

இந்த வைபவத்தில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்எம்.பரீட், பப்புவா நிவ்கினி நாட்டின் அமைச்சரின் பாரியார் திருமதி ரோஸ்லின் மொராட்டா உட்பட முக்கியஸ்தர்கள்  கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .