2026 மே 01, வெள்ளிக்கிழமை

இந்திய நாட்டு பிரபல நாடக தயாரிப்பாளர் மட்டக்களப்பு விஜயம்

Super User   / 2012 ஜூன் 10 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


இந்திய நாட்டு பிரபல நாடக தயாரிப்பாளரும் தமிழ் நாடு மக்கள் நாடக மன்ற ஸ்தாபருமான கலை மணி கே.பிரளயன் இன்று காலை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்தார்.

உலக நாயகன் பத்ம கமலஹாசனுடன் இணைந்து அன்பே சிவம், விறுமாண்டி மற்றும் தசாவதாரம் போன்ற பிரபல தமிழ் திரைப்படங்களுக்கு நடன பங்களிப்பை வழங்கிய இவர் மட்டக்களப்பில் பேராசிரியர் சி.மௌனகுரு தலைமையில் இயங்கும் அரங்க ஆய்வு கூடத்தில் இன்று நடைபெற்ற நாடகத்தில் இசை எனும் தலைப்பிலான பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டு விரிவுரைகளை நிகழ்த்தினார்.

பேராசிரியர் சி.மௌனகுரு தலைமையில் இடம்பெற்ற இப்பட்டறையில் கிழக்கு பல்கலைகழக சுவாமி விபுலானந்தர் அழகியற்கற்கைகள் நிறுவக மாணவர்கள் உட்பட மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களைச்சேர்ந்த 40 பேர் பங்கு கொண்டனர்.

ஆக்கபூர்மான இசையை உருவாக்குதல் திறனுள்ள நாடக ஆர்வல்களுக்கு ஆக்கத்திறனை வெளிப்படுத்துதல் என்பன இப்பட்றையின் நோக்கம் என பேராசிரியர் மௌனகுரு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .