2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு மட்டு. அபிவிருத்தி குறித்து ஆராயும் கூட்டம்

Menaka Mookandi   / 2012 ஜூன் 30 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, ஜிப்ரான்)


கிழக்கு மாகாணத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராயும் விஷேட கூட்டமொன்று பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் காத்தான்குடியிலுள்ள பிராந்திய அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

இதில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் பிரதியமைச்சர்களான பசீர் சேகுதாவூத், விநாயகமூர்த்தி முரளிரதன், மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது தேசத்துக்கு மகுடம் திட்டத்தின் கீழ் பொருக்ளாதார அபிவிருத்தி அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக 4800 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக இக்கூட்டத்தில் ஆராயப்பட்டன.

2000 மில்லியன் ரூபா செலவில் 100 கிலோ மீற்றர் அளவிலான காபட் வீதி மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்படுவதுடன் ஏனைய 2800 மில்லியன் ரூபா நிதியில் நகர் அபிவிருத்தி, குளம் சுகாதாரம் கல்வி போன்ற அபிவிருத்திகளுக்கும் பயன்படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .