2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

மாவடிமுன்மாரி கிராம மக்களுக்கான நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2012 ஜூலை 01 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு, படுவான்கரை பிரதேசத்தின் மீள்குடியேற்றப் பகுதியான மாவடிமுன்மாரி கிராம மக்களின்  தேவைகளை கருத்திற்கொண்டு பொலிஸ் நடமாடும் சேவையொன்று நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்டது.

இந்நடமாடும் சேவையின்;போது பட்டிப்பளை பிரதேச செயலகத்தினால் திருமணப்பதிவுச் சான்றிதழ்கள்,  மரணப்பதிவுச் சான்றிதழ்கள் மற்றும்; தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல் போன்ற சேவைகள்; வழங்கப்பட்டன. இதன்போது புதுக்குடியிருப்பு ஆயுர்வேத களவைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் டி.அருணன் தலைமையிலான வைத்தியக் குழுவினர் பொதுமக்களுக்கான சேவையை வழங்கிய அதேவேளை,  வீதி அபிவிருத்தி திணைக்களம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஆகியனவும் பொதுமக்களுக்கான சேவைகளை வழங்கின.

கடந்த காலத்தில் அதிகமான பாதிப்புக்களை  எதிர்கொண்ட மக்களென்ற வகையில் அவர்களை தேடிச்சென்று சேவையாற்ற வேண்டுமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளுக்கமைய இந்நடமாடும் சேவை நடத்தப்பட்டதாக பட்டிப்பளை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் பண்டார தெரிவித்தார்.

கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமையவும் மட்டக்களப்பு மாவட்ட பதில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த லியனகேவின் ஆலோசனைக்கமையவும் இந்நடமாடும் சேவை நடைபெற்றது. பட்டிப்பளை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் பண்டார தலைமையில் நடைபெற்;ற இந்நடமாடும் சேவையினை மட்டக்களப்பு மாவட்ட பதில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த லியனகே ஆரம்பித்துவைத்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .