2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

இ.உ.தொ.கல்வி நிறுவகத்தின் புதிய கட்டிடத்திற்கான நிர்மாண பணிகள் ஆரம்பிப்பு

Kogilavani   / 2012 ஜூலை 02 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு, ஆரையம்பதியிலுள்ள இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய கட்டிடத்திற்கான நிரமாண பணிகளை உயர் கல்வியமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கா இன்று திங்கட்கிழமை காலை ஆரம்பித்து வைத்தார்.

40 மில்லியன் ரூபா செலவில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இந் நிகழ்வில் பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, விநாயகமூர்த்தி முரளிதரன், அமைச்சின் செயலாளர் சுனில் நவரட்ன, உயர் கல்வி அமைச்சின் மாணவ பிரிவு பணிப்பாளர் கீர்த்தி மாவல்லகே உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க அங்கு வைக்கப்பட்டிருந்த நினைவுப்பலகையை திரை நீக்கம் செய்து வைத்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .