2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

கிழக்கு பல்கலை மாணவர் விடுதிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டிவைப்பு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 03 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுகாதார சௌக்கிய விஞ்ஞானபீடத்தின் மாணவர் விடுதிக் கட்டிடத்திற்கான அடிக்கல்லை மட்டக்களப்பு பிள்ளையாரடியில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க நேற்று ஞாயிற்றுக்கிழமை நாட்டிவைத்தார்.

இந்தக் கட்டிடம் 360 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதற்கான வைபவத்தில்; பிரதி அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, விநாயகமூர்த்தி முரளிதரன் கிழக்கு பல்லைக்கழக வேந்தர் திருமதி யோகராசாநாயகம், உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா, கிழக்கு பல்கலைக்கழக சுகாதார சௌக்கிய விஞ்ஞானபீடத்தின் பீடாதிபதி டாக்டர் எம்.கருணாகரன், கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.பிறேம்குமார், கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் எம்.மகேஸன், கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள், பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .