2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

நுவரெலியாவில் மட்டு மாநகர சபையின் வரவுசெலவு மேம்பாட்டுச் செயற்திட்ட செயலமர்வு

Super User   / 2012 ஜூலை 03 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                             
(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாநகர சபையி;ன் வரவு செலவுத்திட்ட மேம்பாட்டுச் செயற்திட்டம் தொடர்பான செயலமர்வொன்று நேற்று திங்கட்கிழமை நுவரெலியா மாநகரிலுள்ள சண் ஹில் ஹோட்டலில் நடைபெற்றது.

மார்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்செயலமர்வின் போது சிறப்பாக இயங்கிவரும் நுவரெலியா மாநகர சபையின் செயற்பாடுகள் குறித்த கலந்துரையாடலும் கருத்துப்பகிர்வும் நடைபெற்றது.

இச் செயலமர்வில், மட்டக்களப்பு மாநகர சபை சார்பில், மாநகர மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன்;, பிரதிமேயர் ஜோர்ச் பிள்ளை, ஆணையாளர் சிவநாதன், கணக்காளர் திருமதிசிவராஜா,  மாநகர சபை உறுப்பினர்களான தவராஜா, பிரேமன், சசி, தனபாலசிங்கம் உள்ளிட்டோரும்  மற்றும் முகாமைத்துவ உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

நுவரெலியா மாநகர சபையின் மேயர்மகிந்த குமார தொடம்பகே, மாநகர ஆணையாளர் ஈ.ஆர்.சி.பி.அற்றம்பாவல, மாநகர சபை உறுப்பினர்களான ஆர்.ராஜாராம், முகமட் பளீல்மற்றும் உத்தியோகத்தர்களும்  மார்காநிறுவனத்தின் தலைவர் அசோகா குணவர்த்தன மற்றும் திட்ட பணிப்பாளர் விஜயதிலக அதே நேரம் சிவில் சமூகம் சார்பில் மாமாங்கராஜா, கிருஸ்ணமூர்த்தி, ஒக்கஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன் போது, நுவரெலியா மாநகர சபையின் நிரவாக அமைப்பு, வரவுசெலவுத்திட்ட உதுருவாக்கம் தொடர்பான விளக்கங்களை நுவரெலிய மாநகர சபை ஆணையாளர் வழங்கினார்.

அதே நேரம், நுவரெலியா மாநகர சபையினையும், புதிதாக அமைக்கப்பட்டு வரும் கட்டடத்தினையும் மட்டக்களப்பு மாநகர சபை மேயர், ஆணையளார், உறுப்பினர்கள் சென்று பார்வையிட்டனர். குறிப்பிடத்தக்கதாகும்.

மார்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் உலக வங்கியின் நிதியுதவியில், கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவரும் மாதிரி மாநகர வரவ செலவுமத்திட்ட மேம்பாட்டு செயற்திட்டத்தின் கீழ் இச் செயலமர்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.










  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .