2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 05 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு, வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக நேற்று புதன்கிழமை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்கவுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

இதற்கு ஆதரவாக கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட  ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு நகரிலுள்ள சௌக்கிய பராமரிப்புபீடம், கல்லடியிலுள்ள விபுலானந்த அழகியல் கற்கைகள் பிரிவு, திருமலை வளாகம் ஆகியனவும் இணைந்துகொண்டன.

அனைத்து பல்கலைக்கழக ஊழியர் சங்கச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்கவுக்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் நேற்று புதன்கிழமை பணிப்பகிஷ்கரிப்பும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றன.

இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆர்.ராஜசேகரம் தெரிவிக்கையில்,

'கடந்த மாதம் 6ஆம் திகதி முதல் 26ஆம் திகதிவரை  பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தோம்.
26ஆம் திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்  தலைவர், திறைசேரி, அமைச்சின் பிரதிநிதிகள் முன்னிலையில் 45 நாட்களுக்குள் எமது சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க உடன்படிக்கைக்கு வந்தார்.

அத்துடன், ஆர்ப்பாட்ட காலத்தில் எடுக்கப்பட்ட விடுமுறைகள் கவனத்திற்கொள்ளப்பட்டு அதற்கு தீர்வு காணப்படுமெனவும் பழிவாங்கல்கள் எதுவும் மேற்கொள்ளப்படமாட்டாதென்ற உடன்பாடும் இதன்போது எட்டப்பட்டிருந்தது.

கல்விசாரா ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த காலத்தில் விடுமுறை தொடர்பில் 3 சுற்றுநிரூபங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவை தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாதென்று தீர்வு காணப்பட்டது. ஆனால், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரினால்; விசேட சுற்றுநிரூபமொன்று உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதற்கு  எதிராகவே இவ் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுகின்றது' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .