2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

மண்முனை பாலத்தின் நிர்மாண வேலைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை

Kogilavani   / 2012 ஜூலை 05 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு, மண்முனை ஆற்றுக்கு மேலாக அமைக்கப்படவுள்ள பாலத்திற்கான அடிக்கல் நாட்டும்விழா இம் மாத இறுதியில் நடைபெறவுள்ளதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சரின் அலுவலகம் தெரிவித்தது.

மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் தொடர்முயற்சி காரணமாக ஜப்பான் அரசாங்கத்தின் ஜெய்க்கா திட்டத்தின் கீழ் 1600 மில்லியனுக்கும் அதிகமான பணச் செலவில் இப் பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இப்பாலம் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் கடந்த வாரம் வீதி அபிவிருத்தி அதிகார சபையினருக்கும் ஜெய்க்கா நிறுவனத்திற்குமிடையில் ஜப்பானில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ள இப்பாலத்தின் புனரமைப்பு பணிகளை 33 மாதங்களில் நிறைவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய போக்குவரத்துப் பாதையாக இருக்கும் மண்முனை ஆற்றுக்கு மேலாக அமைக்கப்படவுள்ள இப்பாலத்தின் மூலம் பெரியளவான போக்குவரததுப் பிரச்சினை தீர்க்கப்படும என நம்பிக்கை தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .