2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

சுயதொழிலுக்கான கடனுதவி

Suganthini Ratnam   / 2012 ஜூலை 06 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


 'சமூகமட்டக் குழுக்களின் இயலுமையை கட்டியெழுப்புதலும் சமூக அபிவிருத்தியும்' என்னும் திட்டத்தினூடாக சுயதொழிலுக்கான கடனுதவி வழங்கும்  திட்டத்தின் ஓரங்கமாக சுயதொழிலுக்கான கடனுதவி வழங்கும் நடவடிக்கை மட்ஃ மகிழவட்டவான் மகாவித்தியாலய பாடசாலை மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. 

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேசத்தில் கரி;த்தாஸ் எகெட் நிறுவகம் டயக்கோணியா சுவீடன் நிறுவகத்தின் நிதியுதவியுடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

மகிழவட்டவான், கற்குடா, வட்டியல் ஆகிய கிராமங்களிலுள்ள சுய உதவிக்குழு பயனாளிகள்  71 பேருக்கு  விவசாயம், மீன்பிடித் தொழில்களுக்காக தலா 15,000 ரூபா வீதம் மொத்தமாக 1,065,000 ரூபா கடனாக வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கரித்தாஸ் எகெட் நிறுவக சமாதானப்பிரிவின் ரி.மனோகரன், நிதிப்பிரிவின் ஏ.ஜே.அருள்ராஜ், அப்பகுதி ஊக்குவிப்பாளர் ஜீ.சிவரஞ்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .