2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயம்

Kogilavani   / 2012 ஜூலை 07 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                (எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் நேற்றிரவு இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடியைச்சேர்ந்த சில இளைஞர்களிடையே ஏற்பட்ட சண்டையில் இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மதுபோதையில் சென்ற சில இளைஞர்கள் இன்னும் சில இளைஞர்களை தாக்கியதாலேயே இச்சண்டை ஏற்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .