2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

ரயில் மோதி இளைஞர் பலி

Suganthini Ratnam   / 2012 ஜூலை 11 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்,எம்.சுக்ரி)

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திராய்மடு பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில் இளைஞரொருவர் ரயில் மோதி பலியாகியுள்ளார்.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்ற ரயில் இவ்விளைஞர் மீது  மோதியதில் பலியானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

திராய்மடு பகுதியில் ரயில் மோதி பலியான நபர் இன்று புதன்கிழமை காலை அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு, திராய்மடு சுவிஸ் கிராமத்தில் வசித்துவரும் வேல்முருகு ராமச்சந்திரன்(வயது 46) என இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவரின் சடலம் ஏறாவூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

இவ்விபத்து தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .