2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

செவிப்புலனற்ற மாணவர்களுக்கு செவிகேள் கருவிகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2012 ஜூலை 13 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு வாலிபர் கிறிஸ்த்தவ சங்கத்தினால் நடாத்தப்பட்டுவரும் வாழ்வோசை செவிப்புலனற்ற பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு செவிகேள் கருவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு வாலிபர் கிறிஸ்த்தவ சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

சேவ்த சில்ரன் நிறுவனத்தின் அனுசரணையில், மட்டக்களப்பு வாலிபர் கிறிஸ்த்தவ சங்க பணிப்பாளர் கலாநிதி டி.டி.டேவிட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சேவ்த சில்ரன் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் இலாணி பிரசாந், மண்முனை வடக்கு பிரதேச சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.குகதாஸ் உட்பட அதிகாரிகள், கிறிஸ்த்தவ சங்க வாழ்வோசை பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது செவிப்புலனற்ற 27 மாணவர்களுக்கான செவிகேள்; கருவிகளும்; ஒரு மாணவருக்கு மூக்கு கண்ணாடியும் வழங்கி வைக்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .