2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தியில் ஊடகவியலாளரின் பங்களிப்பு தொடர்பான கருத்தரங்கு

Kogilavani   / 2012 ஜூலை 13 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித், சுக்ரி)


'மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தியில் ஊடகவியலாளரின் பங்களிப்பு' தொடர்பிலான ஊடகக் கருத்தரங்கு அரசாங்க தகவல் திணைக்களத்தின் எற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு  மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.

இச் செயலமர்வில், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ், அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம், பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல, பிரதிப் பணிப்பாளர் ஏ.ஹில்மி முஹமத், தேசிய அபிவிருத்தி ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர், ஊடகவியலாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றுவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், நடைபெறவுள்ள விடயங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இச் செயலமர்வில் ஊடகவியலாளருக்கு விளக்கங்கள் வழங்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .