2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் - விகாரதிபதி பத்தப்பொல குணநந்த தேரோ தலைமையிலான குழுவினர் சந்திப்பு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 15 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கும்  ஜெயந்திரபுர விகாரதிபதி பத்தப்பொல குணநந்த தேரோ தலைமையிலான பௌத்தமதக் குருக்களுமிடையிலான சந்திப்பு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

காத்தான்குடியிலுள்ள பிராந்திய அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில், சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வையும்; இன நல்லுறவையும் மேம்படுத்தும் வகையில் கலந்துரையாடல் நடைபெற்றது. 

இந்நாட்டிலுள்ள சமூகங்களுக்கிடையில் வீண் குழப்பங்களை ஏற்படுத்தி அதன் மூலம் சிலர் இலாபமடைய முயற்சிக்கின்றனர். இதற்கு சிங்கள, முஸ்லிம் சமூகங்கள் துணை போகக்கூடாதெனவும் சமூகங்களின் ஒற்றுமைக்காக மதப்பெரியார்களும் சமூகத் தலைவர்களும் பாடுபட வேண்டுமெனவும் ஜெயந்திரபுர விகாரதிபதி பத்தப்பொல குணநந்த தேரோ இதன்போது தெரிவித்தார்.

இதில் காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக்கல்லூரியின் அதிபர் மௌலானா மௌலவி எம்.ஏ.அப்துல்லா ஹசரத், காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி ஆகியோர் கலந்து கொண்டதாக பிரதியமைச்சரின் ஊடக இணைப்பாளர் முகம்மட் சஜி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .