2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

கல்லடி பாலத்தின் நிர்மாண பணிகள் பெப்ரவரியில் பூர்த்தி: பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா

Kogilavani   / 2012 ஜூலை 15 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

மட்டக்களப்பு  கல்லடிப் பாலத்தின் நிர்மாணப்பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்குள் பூர்த்தியடையவுள்ளதாக மாவட்ட அபிவிருத்தக்குழு தலைவரும் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

1700 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் குறித்த கல்லடி பாலத்தின் நிர்மாணப் பணிகளை இலங்கை அரசாங்க தகவல் திiணைக்களத்தின் ஏற்பாட்டடில் தென்பகுதி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள்; நேற்று சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதன்போது, கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின்; முதலமைச்சர் சிவனேத்துரை சந்திரகாந்தன், தகவல் திணைக்கள பணிப்பாளர் ஆரிய ரூபசிங்க, பிரதி பணிப்பாளர் ஹில்மி முஹம்மட் உட்பட பலர் இணைந்திருந்தனர்.
சசிங்கப்பூர் நிர்மாண கம்பனியினால் இப்பாலத்தின் நிர்மானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .