2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கிழக்கு மாகாண சபையை மீண்டும் கைப்பற்றும்: சிவநேசத்துரை சந்திரகா

Kogilavani   / 2012 ஜூலை 15 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் கிழக்கு மாகாண சபையை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றும். ஒருபோதும் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வெற்றிபெற முடியாது என கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பாடும் மீன் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார்.

கிழக்கு மாகாணம் நெல், பால், தானியம் என உற்பத்தித்துறையில் பாரிய அபிவிருத்தியைக் கண்டுள்ளது. சுற்றுலா, மீன்பிடித்துறையிலும் குறிப்பிடத்தக்க அபிவிருத்தியினை அடைந்துள்ளது. கல்வித்துறையிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இவைகள் அனைத்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில்தான் நடந்தது. கிழக்கு மாகாண சபை உருவானதன் பின்னர் இம்மாகாணம் அபிவிருத்தியில் தன்னிறைவு கண்டுள்ளது என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .