2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிப்பு

Kogilavani   / 2012 ஜூலை 16 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுப்படவுள்ள பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை பொதுமக்கள் தொடர்புகள் மற்றும் மக்கள் விவகார அமைச்சர் மேர்வின் சில்வா நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைத்தார்.

சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்புக்கு வருகை தந்த அமைச்சர் மேர்வின் சில்வா வாகரை, காத்தான்குடி, ஏறாவூர் பற்று, கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது, வீதி புனரமைப்பு, விளையாட்டு மைதானம், பொது கிணறு, பொது கழிப்பிடங்கள் அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட வேளைகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வுகளில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ராகுலநாயகி, காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஷ்பர் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .