2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

மட்டு. விவசாயிகளின் நெல் கொள்வனவுக்கு ஜனாதிபதி பணிப்பு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 22 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் நெல்லைக் கொள்வனவு செய்யுமாறு நெல் கூட்டுத்தாபனத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாக மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். 

இது தொடர்பில் நேற்று சனிக்கிழமை இரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தான் வேண்டுகோள் விடுத்ததாகவும் இதற்கமைய ஜனாதிபதி நெல் கூட்டுத்தாபனத்துக்கு  இப்பணிப்புரையை விடுத்ததாகவும் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் கூறினார்.

நேற்று சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேசத்திற்குச் சென்ற மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், அப்பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் மற்றும் தற்போதைய தேவைகள் தொடர்பில்  விவசாய அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இடைப்போக அறுவடைகள் தற்போது மேற்கொள்ளப்படுவதாகவும் அறுவடை செய்யப்பட்ட நெல்லை சந்தைப்படுத்த முடியாது தாம் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் பிரதியமைச்சரின் கவனத்துக்கு இவ்விவசாயிகள் கொண்டுவந்ததுடன்,  நெல் கூட்டுத்தாபனமூடாக தங்களது நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கையை எடுக்குமாறும் அவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பில் தான்  ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு  நெல் கூட்டுத்தாபன தலைவருக்கு ஜனாதிபதி பணித்துள்ளதாகவும் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் கூறினார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .