2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

வேட்பாளர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டம்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 24 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித், எம்.சுக்ரி)


கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

தேர்தல் பிரசார நடவடிக்கைகள், தேர்தல் காலங்களில் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் நடந்துகொள்ள வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டன

இங்கு உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவீந்திர வைத்தியலங்கார,

'தேர்தல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பிடியாணையின்றி கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
வேட்பாளர்கள் செல்லும் வாகனங்கள் தவிர வேறு வாகனங்களில் கட்சிக் கொடியையோ பதாதைகளோ வைப்பது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் இதனை மீறுபவர்கள் தேர்தல் சட்டத்தை மீறுபவர்களாகக் கருதி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

அத்துடன், தேர்தல் சட்ட திட்டங்களுக்கு முரணான செயற்பாடுகள், தேர்தல் ஊழல்கள், ஆகியவற்றில் ஈடுபடும் வேட்பாளர்களுக்கு எதிராக கட்சி வேறுபாடுகளின்றி சட்ட நடவடிக்கை எடுக்குமாறும்  பொலிஸ் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

இதில் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவீந்திர வைத்தியலங்கார, மட்டக்களப்பு உதவித் தேர்தல் ஆணையாளர் அசங்க ரத்நாயக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், வேட்பாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், கட்சி முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .