2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

மண்முனைப் பிரதேசத்தில் வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 26 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட சிறுவர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புத் தொடர்பான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்ற சிறுவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் வாழ்வாதார உதவி, சைக்கிள்கள் பாடசாலை உபகரணங்கள் மற்றும் மருத்துவ சேவையை பெற்றுக்கொள்வதற்கான போக்குவரத்துக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு மண்முனை மேற்கு பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

சிறுவர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புத் தொடர்பான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்ற சிறுவர்களும் அவர்களின் குடும்பங்களும் கிராமமட்ட சிறுவர் கண்காணிப்புக்குழு, சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகஸ்தர்,  சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்தர் போன்றோரால் அடையாளம் காணப்பட்டனர்.

யுத்தத்தினாலும் முரண்பாடுகளினாலும் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு என்னும் திட்டம்  சேவ்த சில்ரன் நிறுவனத்தின் அனுசரணையுடன்  மக்கள் முன்னேற்ற அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவனத்தினால் மண்முனை மேற்கு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

வவுணதீவு பிரதேச  செயலாளர் எஸ்.தவராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகஸ்தர் எம்.மதியழகன், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் எம்.வரதராஜன், சேவ்த சில்ரன் நிறுவனம், மக்கள் முன்னேற்ற அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள்,  கிராம உத்தியோகத்தர்கள், நிறுவன உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .