2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் அகற்றப்படும் முன்னாள் முதலமைச்சரின் கட்டவுட்கள்

Menaka Mookandi   / 2012 ஜூலை 26 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)


மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையத்துக்கருகில் நிறுவப்பட்டிருந்த கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் பிரமாண்டமான கட் அவுட் தற்சமயம் அகற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றது. 

இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்புக்கு வருகை தந்திருந்த பிரதித்  தேர்தல் ஆணையாளர் எம்.எம்.முஹம்மத், தான் வரும் வழியில் இந்த கட் அவுட்டை அவதானித்ததாகவும் இது தேர்தல் விதிமுறைகளுக்கு முறனானது எனவும் மட்டக்களப்பு கச்சேரியில் நடந்த கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் அவற்றை உடனடியாக அகற்ற பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். போஸ்டர்கள் பிரசுரங்கள் குறித்த 1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். 

இந்தச் சட்டத்திற்கு வெளியே எவரும் சென்று செயற்பட முடியாது. இதன்படி போஸ்டர், கட் அவுட் என்பவை பொது இடங்களில் காட்சிக்கு வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. பல இடங்களிலே அவை நீக்கப்பட்டிருக்கின்றன. பஸ் தரிப்பிடங்களிலுள்ளவற்றை பொலிசார் உடனே அகற்றுவார்கள் எனவும் பிரதித்  தேர்தல் ஆணையாளர் எம்.எம்.முஹம்மத் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .