2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

புதிய காத்தான்குடி பைசால் வீதி நூறு இலட்சம் ரூபா செலவில் புனரமைப்பு

Kogilavani   / 2012 ஜூலை 28 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி பைசால் வீதி நூறு இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளது.

இதற்கான ஆரம்ப வேலைகள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவ் வைபவத்தில் கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வேட்பாளராக போட்டியிடும் பொறியியலாளர் எம்.எப்.எம்.சிப்லி, காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீர் உட்பட முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த வீதி வடிகான் அமைக்கப்பட்டு கொங்கிறீட் விதியாக புனரமைக்கப்படவுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .