2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

வெள்ள அனர்த்தத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் கையளிப்பு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 23 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக  வீடுகளை இழந்த செங்கலடி – மாவடிவேம்பு பிரதேச மக்களுக்கு நிரந்தர வீடுகளை கையளிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.

வேள்ட் விஷன் நிறுவனத்தின் 15 மில்லியன் ரூபா நிதியில் மேற்படி வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 45 நிரந்தர வீடுகள், 104 மலசல கூடம், 244 கிணறுகள் என்பன மக்களிடம் கைளிக்கப்பட்டன.

அத்துடன், செங்கலடி பிரதேச வாழ்வாதார திட்டத்தின் கீழ் துவிச்சக்கர வண்டிகள் மற்றும் தொழில் உபகரணங்ளும் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில், மாவட்டச் செயலாளரும், மாவட்ட அரசாங்க அதிபருமான பி.எஸ்.எம்.சாள்ஸ், செங்கலடி பிரதேச செயலாளர் உ.உதயசிறீதர், வேள்ட் விஷன் நிறுவன முகாமையாளர் அலக்ஸ் பெஞ்ஜமின், வலய பிரதேச முகாமையாளர் அ.ரவீந்திரன் உட்பட பலர்  அதிதிகளாக கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .