2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

மட்டு. மத்தி கல்வி வலய புதிய கட்டிடம் திறப்பு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 24 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)


மட்டக்களப்பு மத்தி. கல்வி வலய புதிய கட்டிடம், ஏறாவூர் - புன்னைக்குடா வீதியிலுள்ள அல்-ஜுப்ரியா வித்தியாலயத்தின் வளாகத்தில் இன்று திங்கட்கிழமை பகல் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் கல்வி பண்பாட்டலுவல்கள், காணி காணி அபிவிருத்தி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, விவசாய கால்நடை அபிவிருத்தி சுற்றுலாத்துறை மீன்பிடி சிறு கைத்தொழில் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமத், கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர், முன்னாள் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரும் கிழக்கு மாகாண சபையின் தற்போதைய உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீரலி, தேசிய காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.எஸ்.எம்.நஸீர் உள்ளிட்டோரும் இன்னும் பல கல்வி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X