2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

வவுணதீவுப் பிரதேச மக்களுக்கு வெள்ள நிவாரணம்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 26 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார்)


மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வவுணதீவுப் பிரதேசத்திலுள்ள 5 கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை நிவாரணங்கள் வழங்கப்பட்டன.

மண்டபத்தடி, கரையாக்கந்தீவு, விளாவெட்டுவான், புதுமண்டபத்தடி ஆகிய கிராம மக்களுக்கான நிவாரணங்களை அகில இலங்கை இந்து மா மன்றத்துடன் இணைந்து மட்டக்களப்ப மாவட்ட இந்து இளைஞர் மன்றம் வழங்கியது. 

முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் மன்றத் தலைவருமான எம்.பவளகாந்தன், மாவட்ட சமூக சேவை உத்தியோகஸ்தரும் இந்து இளைஞர் மன்ற பொதுச் செயலாளருமான எஸ்.அருள்மொழி, மன்றத்தின் உபதலைவர் அ.செல்வேந்திரன் ஆகியோர் நிவாரணங்களை வழங்கினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X