2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வரவு செலவுத்திட்டம் சமர்பிப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 26 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி, ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாநகர சபையின் 2013 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம்  இன்று புதன்கிழமை  மாநகரசபை அமர்வில் மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரனினால் சமர்ப்பிக்கப்பட்டது.

இன்று காலை சபை அமர்வு ஆரம்பமானவுடன் சுனாமியினால் உயிர் நீத்தவர்களுக்கான இரண்டு நிமிடநேரம் மௌனப்பிரார்த்தனை இடம்பெற்றது.

இதையடுத்து 2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கையை மேயர் திருமதி சிவகீர்த்தா வாசித்தார்.

இன்யை சபை அமர்வில்; மட்டக்களப்பு மாநகர சபை பிரதியேமர் ஏ.ஜோர்ஜ் பிள்ளை உட்பட சபையின் இவ் ஆண்டு 191 மில்லியன் ரூபாய் வரவும் அதில் 72 மில்லின் ரூபா மட்டக்களப்பு மாநகர சபையின் நிதியெனவும் 119மில்லியன் ஏனைய நிறுவனங்களில் இருந்து வந்தது எனவும் மேயர் திருமதி சிவகீர்த்தா வாசித்தார்.

இதேவேளை, 191 மில்லியன் செலவு எனவும் தெரிவித்ததுடன் அடுத்த ஆண்டுக்கான திட்டத்தினையும் முன்மொழிந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X