2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

கன்டர் குடைசாய்ந்ததில் ஒருவர் படுகாயம்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 26 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்துகொண்டிருக்கும் நிலையில் வீதிகளில் போக்குவரத்துகளில் ஈடுபடும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அண்மைக்காலமாக பெய்துவரும் மழை காரணமாக விபத்துக்கள் அதிகரித்துள்ள நிலையில் சாரதிகளை அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

வாகனங்களை செலுத்துபவர்கள் மெதுவாகவும் அவதானமாகவும் வாகனங்களை செலுத்துவார்களானால் விபத்துக்கள் குறையும் எனவும் அவர் தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் இன்று பிற்பகல் கன்டர் ஒன்று குடை சாய்ந்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பொருட்களை ஏற்றிக்கொண்டு வேகமாகச்சென்ற கன்டர் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை மீறி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது குறித்த வாகனத்தில் பயணம் செய்த சாரதி படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.



  Comments - 0

  • pathamdeva Thursday, 27 December 2012 06:35 AM

    செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள படத்தில் “கன்ரர்“ வாகனத்தைக் காணவில்லையே!! இந்தியத் தயாரிப்பான சிறு பாரவூர்தியல்லவா காணப்படுகிறது!! “கன்ரர்” என்பது ஜப்பானிய மோட்டார் நிறுவனமொன்றின் பாரவூர்தியினது ஒரு வகைப்பெயர் என்பதைக் கூட அறியாத ஊடகவியலாளர்களும் இருக்கிறார்களா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X