2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

தொலைந்த பணம் உரியவரிடம் ஒப்படைப்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 27 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)


பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்தபோது தொலைந்து போன 16,000 ரூபா பணம் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் வைத்து உரியவரிடம் இன்று வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

இப்பணத்தைத் தொலைத்தவரான நபர் தெரிவிக்கையில்,

'வங்கியிலிருந்து எடுத்த 19,000 ரூபாவையும் காகித உறையில் வைத்து அது பணமென தெரியாமலேயே வீட்டில் கொடுத்துவிடுமாறு எனது தம்பியிடம் கொடுத்தேன்.  இந்நிலையில், அவர் வாழைச்சேனையிலிருந்து கிரானுக்கு பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்தபோது பணம் தொலைந்துபோனது. அவர் பஸ்ஸை விட்டிறங்கும்போதே பணம் தொலைந்து போனமை தெரியவந்தது. உடனடியாக பஸ் நடத்துனருடன் தொடர்புகொண்டபோது யாரோ ஒருவர் பணத்தைக் கண்டெடுத்து அதனை ஏறாவூர் பொலிஸில் ஒப்படைத்ததாகக் கூறினார். உடனடியாக  ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு வந்து பணத்தைப் பெற்றுக் கொண்டோம்' என்றார்.

இதேவேளை, பணத்தைக் கண்டெடுத்து அதனை ஏறாவூர் பொலிஸில் ஒப்படைத்தவரின்  நேர்மையை  பாராட்டிய  ஏறாவூர் பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.பி.பெரேரா, அப்பணம் உரியவரிடம் போய்ச் சேர வேண்டுமென்பதில் அவர் எடுத்துக்கொண்ட அக்கறை அனைவருக்கும் ஒரு முன்மாதிரியெனக் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X