2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

இராணுவத்தின் ஏற்பாட்டில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 29 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, ரி.லோஹித்)


இலங்கை இராணுவத்தினரின் 231 படைப்பிரிவும் மட்டக்களப்பு ஆயர் இல்லமும் இணைந்து ஏற்பாடு செய்த கிறிஸ்மஸ் கொண்டாட்டம் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னைய்யா ஜோசப், மற்றும் மட்டக்களப்பு இராணுவ இணைப்பதிகாரி பிரிகேடியர் சுதத் திலகரட்ண, கிழக்கு மாகாண சிரேஷ்;ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜந்த சமரகோன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரட்ன, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் கே.சிவநாதன் உட்பட மற்றும் சமய பிரமுகர்கள் இராணுவ பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதில் கொழும்பிலிருந்து வருகை தந்த இராணுவத்தினரால் கரோல்ஸ் கீதம் இசைக்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.




  Comments - 0

  • Raman Saturday, 29 December 2012 07:01 PM

    கிழக்கு மாகாண சம்பிரதாயமான நாட்டுக்கூத்து நாட்டின் மற்றைய இடங்களிலும் அரங்கேற இது சந்தர்ப்பம் கொடுக்கும் என நம்புகின்றேன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X