2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

நாசிவன்தீவு கிராம மக்களுக்கு வெள்ள நிவாரணம்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 30 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாசிவன்தீவு கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

மனிதநேய நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் நாசிவன்தீவு பல்தேவைக் கட்டிடத்தில் வைத்து இந்நிவாரணப் பொருட்கள் நேற்று சனிக்கிழமை வழங்கப்பட்டன.  குடும்பமொன்றுக்கு 600 ரூபா வீதம் 337 குடும்பங்களுக்கு இந்நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் எம்.பவளக்காந்தன், மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகஸ்தர் எஸ்.அருண்மொழி, கோறளைப்பற்று பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகஸ்தர் எஸ்.ஜெயசேகர், கிராம அலுவலக உத்தியோகஸ்தர் வரதராஜன் ஆகியோர் கலந்துகொண்டு நிவாரணப் பொதிகளை வழங்கினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X