2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

பாதிக்கபட்டப் பகுதிகளுக்கு நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

Kogilavani   / 2012 டிசெம்பர் 30 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

வெள்ளம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், வீடுகள் பாதிப்பு, விவசாய நிலங்கள் பாதிப்பு, தொழில் பாதிப்பு போன்றவற்றுக்கு நிதிகளை ஒதுக்கி அவற்றுக்கு தீர்வுக் காண நடவடிக்கை எடுக்குமாறு அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சருக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

'வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரல்' என்ற தலைப்பில் அவசரமாக அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இக்கோரிக்கையினை விடுத்துள்ளார்.

அவரது கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

'இரண்டு வாரங்களுக்கு மேலாக இம்மாவட்டத்தில் பெய்த பெரும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பல பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அண்ணளவாக 63 ஆயிரம் குடும்பங்களும், தனிநபராக இரண்டு லட்சத்து 50ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இடம்பெயர்ந்தவர்களில் 800இற்கு மேற்பட்டவர்களும் வீடு பாதிக்கப்பட்டவர்கள் 2500இற்கு மேற்பட்டவர்களும் உள்ளடங்குகின்றனர்.

அத்துடன் 20ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட வேளாண்மைகளும் நோய் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளன.

சில இடங்களில் மழையுடன் கூடிய மினி சூறாவளி வீசியதால்  களுவாஞ்சிக்குடி, ஒந்தாச்சிமடம், குறுமன்வெளி, மகிளூர், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் நாவற்குடா, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் கோப்பாவெளி போன்ற கிராமங்களில் முழுமையாகவும் பகுதியாகவும் வீடுகள் பாதிக்கப்பட்டதோடு விவசாய தோட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.  

வெள்ளம் காரணமாக குளங்கள் திறந்துவிடப்பட்டதனால் கிரான்பாலம் போன்ற பாலங்கள் வெள்ள நீரில் மூழ்கின.

இதனால் பாதிக்கப்பட்ட மக்களில் 90 வீதமானவர்கள் பாடசாலைகளில் பரீட்சை நடந்ததாலும் வசதிக் குறைபாடுகள் இருந்த காரணத்தினாலும் முகாம்களில் தங்கமுயற்சிக்கவில்லை.

இவர்கள் இடம்பெயர்ந்து உயரமான பகுதிகளில் உள்ள உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கு சென்றனர். ஆனால் வாகரை செங்கலடி பிரதேசசெயலாளர் பிரிவுகளில் அநேகமானோர் முகாம்களிலே தங்கி இருந்தனர்.

வெள்ளநீர் வீடடுகளுக்குள்; சென்றதால் வீடுகளில் சேமிக்கப்பட்டிருந்த நெல்மூடைகள், அரிசி உட்பட பல்வேறு தானியங்கள் பழுதடைந்துவிட்டன.

மேட்டு நில விவசாய பயிர்செய்கை முற்றாக பாதிப்படைந்துள்து.  சில இடங்களில் வீட்டுப் பாவனைப் பொருட்கள்  வெள்ளத்தில் அள்ளுண்டு போயின.

மீன்பிடி தொழில் உபகரணங்கள் சில இடங்களில் முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பெய்த மழை வெள்ளத்தினாலும் கடல் கொந்தளிப்பினாலும் மீனவர்கள் தொழிலுக்கச் செல்லவிலலை.

ஏனைய கூலித் தொழிலாளர்கள்; தொழிலுக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டு அவர்களது நாளாந்த வருமானமும் தடைப்பட்டுள்ளது.

போக்குவரத்து பாதைகளில் சேதமேற்பட்டுள்ளது. பல பாலங்கள் உடைப்பு எடுக்கப்பட்டதுடன், வடிகால்கள் சீரற்று  காணக்கூடியதாக உள்ளது. இதனால் பஸ்போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

விவசாயப் பிரதேசங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியதால் இப்பகுதியில் இருந்த வேளான்மைகள், அழிவடைந்துள்ளன. இவ்வேளான்மைகள் மணல் வார்கப்பட்டும் கரும்புள்ளிகள் எற்பட்டும் நோய்தாக்கம் ஏற்பட்டு பாதிப்படைந்துள்ளன.

அத்தோடு இப்பகுதியில் இருந்த வாய்க்கால்கள், அணைக்கட்டுக்கள் உடைப்பெடுத்துள்ளன. இச் சூழ்நிலைக் காரணமாக சிலபகுதிகளில் வறுமை தலைதூக்கி உள்ளது. எனவே பாதிக்கபட்டப்பகுதிகளுக்கு நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இக்கடிதத்தின் பிரதிகள் கிழக்கு மாகாண முதலமைச்சர், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X