2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் மீண்டும் மழை

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 04 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் கடும் மழையால் அம்மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவிலிருந்து கடும் மழை பெய்துவருவதுடன், பல வீதிகளிலும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

காத்தான்குடி 6ஆம் குறிச்சியிலுள்ள தாரூஸ்ஸலாம் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், இப்பகுதியிலுள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளிலும் வெள்ளநீர் புகுந்துள்ளது.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிவரை 81.2 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய அதிகாரி எம்.சூரியகுமார் தெரிவித்தார். அத்துடன், கடந்த முதலாம் திகதியிலிருந்து  இன்று வெள்ளிக்கிழமை காலைவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 111.7 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X