2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வெள்ளநீர் வடிந்தோடுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வலியுறுத்தி தாரூஸ்ஸலாம் மக்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 04 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி,ஜிப்ரான்)


காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தாரூஸ்ஸலாம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் மழைக்கு மத்தியிலும் காத்தான்குடி பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

தாரூஸ்ஸலாம் பகுதி வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. இப்பகுதியிலுள்ள வெள்ளநீரை வடிந்தோடுவதற்கு வழிசெய்யுமாறு வலியுறுத்தியே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தமது பகுதியிலுள்ள வெள்ளநீரை வடிந்தோடச் செய்யுமாறும் இப்பகுதி தொடர்ந்து அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும் புறக்கணிக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர். 

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மிலிடம் மகஜரொன்றையும் இவர்கள் கையளித்தனர். 

இதற்கிடையில் தாரூஸ்ஸலாம் பகுதிக்குச் சென்று அங்குள்ள  வெள்ள நிலைமைகளை பார்வையிட்ட காத்தான்குடி பிரதேச செயலாளர் முஸம்மில், வெள்ளநீரை வடிந்தோடச் செய்வதற்கான நடவடிக்கைகளை காத்தான்குடி நகரசபைத் தலைவருடன் சேர்ந்து மேற்கொள்வதாகவும்  தெரிவித்தார்.

தாரூஸ்ஸலாம் பகுதி ஒவ்வொரு வருடமும் வெள்ளத்தில் மூழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. படங்கள்:-எம்.சுக்ரி





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X