2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

லொறி பாதையை விட்டு விலகி விபத்து

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 06 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


பாதையை விட்டு விலகிச் சென்ற லொறியொன்று அங்குள்ள இராணுவ முகாமின் காவலரணை உடைத்துக்கொண்டு சென்ற சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தின் புதுகுடியிருப்பு பகுதியில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

பொலன்னறுவையிலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு கல்முனைக்குச் சென்றுகொண்டிருந்த லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளானது. இதன்போது காவலரண் முற்றாக சேதமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான விசாரணையை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X