2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் மழை; பல பகுதிகள் வெள்ளத்தில்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 07 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான், சுக்ரி,ஸரீபா,ஜவீந்திரா)


மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இம்மாவட்டத்தில் நான்காவது நாளாகவும் கடும் மழை பெய்து வருகின்றது. இன்று திங்கட்கிழமை காலை 5.30 மணியுடனான 21 மணிநேரத்தில் 58.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, காத்தான்குடி இலங்கை போக்குவரத்துச்சபை டிப்போ வெள்ளத்தில் முற்றாக மூழ்கியுள்ளது. டிப்போவின் நிர்வாக அலுவலகம், எரிபொருள் பகுதி அடங்களாக அனைத்து பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

மேலும், கடந்த 24 மணித்தியாலயத்திற்குள் மட்டக்களப்ப மாவட்டத்தில் 119.0 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி சூரியகுமார் தெரிவித்தார்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X