2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

செஞ்சிலுவை சங்க கிளையின் ஏற்பாட்டில் சிரமதான பணி

Kogilavani   / 2013 ஜனவரி 10 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா)

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த ஏறாவூர் பற்று பிரிவில் உள்ள மட்/  பலாச்சோலை விவேகானந்த வித்தியாலயத்தில் சிரமதான நடவடிக்கையொன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்புக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிரமதானத்தில்
கிராம மக்கள், பொலிஸார், மற்றும் சமூர்த்தி உத்தியோகஸ்தர், பிரதேச செயலக உறுப்பினர்கள் கலந்துகொண்டு இப்ணியினை மேற்கொண்டனர்.
 
இப்பகுதி மாணவர்களின் நன்மைகருதி மேற்கொள்ளப்பட்ட இவ் மனிதாபிமானப் பணிக்கு தாம் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாக இவ்வித்தியாலய அதிபர் த.சித்திரவேல் தெரிவித்திருந்தார்.
 
இந்நிகழ்வில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க தலைவர் த.வசந்தராஜா உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X