2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வதை பெண்கள் தவிர்க்கவேண்டும்: பிரதியமைச்சர் முரளிதரன்

Kogilavani   / 2013 ஜனவரி 13 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.லோஹித்    

தொழிலுக்காக வெளிநாடு செல்லும் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு தெரிவித்துள்ள மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இலங்கையிலே சிறந்த தொழில் நிலைகளை உருவாக்கி வருமானத்தைப் பெற்றுக் கொள்ளும் வழிவகைகள் தொடர்பில் சிந்திக்குமாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது    

'சவூதியில் சிரச்சேதம் செய்யப்பட்ட ரிசானாவின் சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளையும் கருத்தில் கொள்ளாது மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த அரசாங்கத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.    

தனது மகளை பறிகொடுத்துத் துயறுரும் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துகொள்வதுடன் அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை மன்றாடுகிறேன்.    

வறுமை காரணமாக வெளிநாடுகளுக்கு குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் பெற்றுச் செல்லும் தமிழ் பெண்களுக்கும் ரிசானாவின் மரண தண்டனை ஒரு செய்தியாகும்.    

தொழில் பெற்று வெளிநாடு செல்ல எண்ணியுள்ள பெண்கள் அது தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டும். இது தொடர்பில் பெற்றோரும் விழிப்புடன் இருக்கவேண்டும். பெண் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதை நிறுத்திக் கொள்ளவும்.    

இன்று வறுமை நிலையை ஒழிப்பதற்காக பல்வேறு செயற்றிட்டங்கள், பயிற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. அதற்காக பெருந்தொகையான பணத்தினை வருடாந்தம் ஒதுக்கி வருகின்றது. அவற்றினை எமது மக்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

அத்துடன் போலி முகவர்கள் ஊடாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு தமது பெண் பிள்ளைகளை அனுப்புவோருக்கு ரிசானாவின் சம்பவம் நல்ல படிப்பினையை தந்துள்ளது. எதிர்காலத்தில் போலி முகவர்கள் தொடர்பிலும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.  

இந்த நிலையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெண்களை அனுப்புவதை நிறுத்த வேண்டும் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திடமும் கோரிக்கை விடுக்கிறேன். 

எமது சமூகம் கடந்த காலத்தில் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்த சமூகம். மீண்டும் ஒரு இன்னலுக்குள் செல்லாமல் இருக்க வேண்டும் ' என பிரதியமைச்சர் தெரிவித்தார்

  Comments - 0

  • IBNU ABOO Monday, 14 January 2013 12:48 PM

    அமைச்சரின் ஆலோசனை சிறந்ததுதான். ஆனாலும் இந்த அரசாங்கத்தால் வறிய படிக்காத மக்களுக்கு பெரிய சம்பளத்தில் வேலை வாய்ப்பு பெற்று கொடுப்பார்களா. பட்டதாரிகளே வேலைக்கு திண்டாடும்போது இந்த பெண்களுக்கு வேலை கிடைக்க முடியுமா. மத்திய கிழக்கு நாடுகள் தான் எத்தனையோ ஆசிய ஆப்ரிக்க நாட்டு ஏழைகயளுக்கு கைகொடுக்கின்றன.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X