2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

ரிசானாவின் குடும்பத்திற்கு சவூதி இளவரசியின் சட்ட ஆலோசகர் நிதியுதவி

Super User   / 2013 ஜனவரி 13 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி, ஜிப்ரான்

மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட ரிசானா நபீக்கின் குடும்பத்திற்கு உதவும் பொருட்டு சவூதி அரேபியாவின் இளவரசி ஆதிலாவின் சட்ட ஆலோசகர் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அல் ராசிட் நிதியுதவி வழங்கியுள்ளார்.

காத்தான்குடிக்கு நேற்று சனிக்கிழமை விஜயம் செய்த சவூதி அரேபிய இளவரசியின் சட்ட ஆலோசகர் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர் ராஹீத் தனது சொந்த நிதியிலிருந்து 10 இலட்சம் ரூபாவை பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிம் கையளித்துள்ளார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான இணைப்பாளர் மசூர் மௌலானா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் மற்றும் காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0

  • Raaman Sunday, 13 January 2013 09:49 AM

    ரிசானாவின் உயிருக்கு இந்தப் பத்து லட்சம் ரூபா ஈடாகுமா தனவந்தரே?. ரிசானாவின் குடும்பத்தினர் இதையா எதிர் பார்த்தார்கள்?. இருந்தாலும் உங்கள் மனிதாபிமனத்தை மெச்சுகிறோம்..

    Reply : 0       0

    Kanavaan Sunday, 13 January 2013 11:41 AM

    சட்ட ஆலோசகரே, உங்கட ஆலோசனைக்கு என்ன நடந்தது? உங்களால‌யோ அல்லது உங்கட‌ சட்ட ஆலோசனையால‌யோ என்னய்யா பயன்? ஒரு அப்பாவி ஏழையின்ர‌ உயிரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே. உங்கட எண்ணப்படி எங்கட சிறிலங்காவில‌ முஸ்லிம் பெண் ஒருத்தர்ர‌ உயிரின் பெறுமதி 10 லட்ச்ம் ரூபா எண்டு நினைக்கிறியளாக்கும் என்ன‌? எங்கட மந்திரி எண்டா பத்தாயிரம் ரூபா எண்டாலே வாயைப் பிளந்திடுவாரு. இவனுகளாலதான் இந்த முஸ்லிம் சமூகத்துக்கு இவ்வளவு அழிவு, நெருக்கடி, கஸ்டம் எல்லாமே. இவனுகளுக்கு வந்த காலம்.

    Reply : 0       0

    IBNU ABOO. Sunday, 13 January 2013 03:00 PM

    இதில் இருந்து என்ன புறிகிரது. ஒரு நிரபராதி சட்டத்தின் இருட்டறைக்குள் அகப்பட்டு தெளிவுபடுத்த ஆளில்லாமல் வாளுக்கு இறையாகி விட்டாரே என்று மனச்சாட்சி உருத்துகிறதா? உங்கள் பணத்தை விட மேலான சொர்கத்துக்கு அவள் சொந்தக்காரியாகி விட்டால்.

    Reply : 0       0

    ஜெமீல் - ஓட்டமாவடி Sunday, 13 January 2013 03:08 PM

    அரபு வசந்தம் சௌதியிலும் வர வேண்டும் என நான் பிரார்திக்கிறேன். குரைசிகள் தான் ஆள வேண்டும் என்று குரானில் எந்த சட்டமும் இல்லை.

    Reply : 0       0

    aap Sunday, 13 January 2013 03:15 PM

    கோடி கோடியை கொட்டிக் கொடுத்த்லும் ரிசானவின் உயிருக்கு ஈடாஹுமா?

    Reply : 0       0

    jesmin Sunday, 13 January 2013 04:34 PM

    ரிசானாவின் உயிருக்கு எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடாகுமா. ரிசானாவின் தலை துண்டிக்கப்படும் காட்சியை அந்த பெண்ணின் தாய், தந்தை, குடும்பத்தவர் காண்பார்களேயானால் அவர்களுக்கு இந்த பணம், வீடு என்ற ஆசை வார்த்தைகளெல்லாம் ஒரு தூசாகவே தென்படும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X