2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

சவூதி இளவரசியின் சட்ட ஆலோசகர் கல்குடாவுக்கு விஜயம்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 13 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஸரீபா

சவூதி இளவரசர் ஆதீலாவின் செயலாளர் எஹ்யா அப்துல் அசீஸ் அல்றாசீத்துடனும கல்குடாத்தொகுதிக்கு நேற்று சனிக்கிழமை விஜயமொன்றை மேற்கொண்டார்.

கிழக்கு மாகாண விவசாய கால்நடை மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி மீன்பிடி சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டின் வேண்டுகோளுக்கமையவே அவர் இவ்விஜயத்தை மேற்கொண்டார்.

இக்குழுவினர் வாழைச்சேனை முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தினரைச் சந்தித்ததுடன் காவத்தமுனைக் கிராமத்திலுள்ள பெண்களின் சுயதொழில் முயற்சிகளுக்கான உதவித்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினர்.  அத்துடன் இக்குழுவினர் தியாவட்டுவான் ஹூஸைனியா ஜூம்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தினரைச் சந்தித்ததுடன் மீள்குடியேற்றக் கிராமமான கொண்டயன்கேணி கிராமத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பலும் கலந்துரையாடினர்.

இதன்போது ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் அப்துல் காதர் அல் மசூதும் மௌலானா, கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X