2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண உள்ளுராட்சி விசேட திறன் விருது விழா

Super User   / 2013 ஜனவரி 15 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி


கிழக்கு மாகாண உள்ளுராட்சி விசேட திறன் விருது வழங்கும் விழா இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாநகர சபை நகர மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்த விருது வழங்கும் விழாவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எஸ்.அபேகுணவர்த்தன மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கிழக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்களத்தினால் கிழக்கு மாகாண மட்டத்தில் நடாத்தப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கு இடையிலான முகாமைத்துவ, திண்மக்கழிவகற்றல் போட்டி, சிறந்த நூலகங்களை நடாத்திய சபைகள் மற்றும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் கலந்துகொண்ட உள்ளூராட்சி மன்றங்கள் ஆகியவற்றுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X