2026 மே 02, சனிக்கிழமை

இந்துநாகரீக பாடநெறி ஆசிரியர்களுக்கான செயலமர்வு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 30 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி


இந்துநாகரீகம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான 3 நாள் பயிற்சிச் செயலமர்வொன்று மட்டக்களப்பு இந்து கலாசர மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது.

நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை ஆரம்பமான இச்செயலமர்வு இன்று புதன்கிழமையுடன் முடிவடைகின்றது.

இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் நடத்தப்படுகின்ற இச்செயலமர்வில் மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து இந்துநாகரீகம் கற்பிக்கும் ஆசிரியர்கள் 75 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

இதற்கான ஆரம்ப வைபவத்தில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் கேமலோஜினி குமரன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், மட்டக்களப்பு மாவட்ட இந்து கலாசார உத்தியோகஸ்தர் எழில்வாணி பத்மநாதன், கலாசார உத்தியோகஸ்தர் நிர்மலா கருணானந்தராசா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .