2026 மே 02, சனிக்கிழமை

பாழடைந்த காணிகளை கையகப்படுத்த நடவடிக்கை

Kogilavani   / 2013 பெப்ரவரி 08 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.லோஹித்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் பயன்பாடுகளற்ற நிலையில் பாழடைந்து காணப்படும் காணிகளையும் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை பிரதி மேயர் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பாழடைந்த காணிகளில் இருந்து பாம்புகள் படையெடுப்பது மற்றும் சட்ட விரோத செயற்பாடுகள் இடம்பெறுகின்றமை தொடர்பில் மாநகர பிரதி முதல்வர் ஜோர்ஜ்பிள்ளையை தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

டெங்கு நுளம்பின் பெருக்கமும் சமுதாய சீர்கேடுகளும் நடைபெறுவற்கு இப்பாழடைந்த காணிகள் வழி வகுக்கின்றன.

இதன் காரணமாக மாநகர சபையின் உள்ளூராட்சி கட்டளை சட்டத்திற்கு அமைய இக்காணிகள் மாநகரசபைக்கு உடமையாக்கபடவுள்ளன.

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் எத்தனையே காணி அற்ற குடும்பங்கள் அல்லல்படும் நிலையில் இவ்வாறான காணிகள் பாழடைந்திருப்பது மிகவும் வேதனைக்குரியது. ஆகவே இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் காணிகளை மாநகரசபையின்  தீர்மானத்துடன் பகிர்ந்து கொடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .