2026 மே 02, சனிக்கிழமை

'பாம் பவுன்டேசன்' அமைப்பினால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

Kogilavani   / 2013 பெப்ரவரி 08 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஜவீந்திரா


 'பாம் பவுன்டேசன்' எனும் அரச சார்பற்ற தன்னார்வ தொண்டர் அமைப்பு நேற்று முன்தினத்திலிருந்து செங்கலடி சுகாதார காரியாலயத்துடன் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கமைவாக, டெங்கு விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்கள் மற்றும் பதாதைகள் 5000 இவ் அமைப்பினால் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சுகாதார வைத்திய அதிகாரிகள், சுகாதார பரிசோதகர்களுடன் இணைந்து பாம் பவுண்டேசன் உத்தியோத்தர்கள் முழு நேர டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாடசாலை மாணவர்களுக்கும் டெங்கு ஒழிப்பு தொடர்பாக தெளிவுப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதேவேளை கிராம சுத்திகரிப்பு பணிக்காக அதிகமான கிராமங்களில் சிரமதான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .