2026 மே 01, வெள்ளிக்கிழமை

பாலம் புனரமைக்கப்படாததால் மக்கள் விசனம்

Kogilavani   / 2013 பெப்ரவரி 09 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஐதுசன்


மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவிலுள்ள மதுரங்குடலை வீதி பாலமானது  சேதமடைந்து  3 வருடங்கள் பூர்த்தி அடைந்தும் இதுவரையில் பாலம் புனரமைக்கப்படவில்லை என பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனால் காக்காச்சிவட்டை செல்ல 1 கிலோ மீற்றர் பயணம் செய்ய வேண்டிய நிலையில் பாலையடிவட்டை சுற்றி 4 கிலோ மீற்றர் பயணம்
செய்கின்றனர்.

இதனால் கிராம மக்கள், விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .