2026 மே 02, சனிக்கிழமை

'சிவில் சமூக உள்ளூராட்சி கூட்டாண்மை' செயலமர்வு

Kogilavani   / 2013 பெப்ரவரி 10 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி
, லோஹித்

மேம்படுத்தப்பட்ட சேவைகள் வழங்குகையில் ஏற்படும் சிக்கல்களை அடிப்படையாக கொண்ட சிவில் சமூக உள்ளூராட்சி கூட்டாண்மை எனும் தலைப்பிலான செயலமர்வு ஒன்று மட்டக்களப்பு சுபராஜ் விடுதியில நேற்று நடாத்தப்பட்டது.

இலங்கை தேசிய சமாதானப் பேரவையினால் தேசிய சமாதானப்பேரவையின் தலைவர் ஜஹான் பெரேரா தலைமையில் இந்த செயலமர்வு நடாத்தப்பட்டது.

இந்த இரு நாள் கருத்தரங்கின் விரிவுரைகளை தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் கலாநிதி ஜெஹான் பெரேரா, சட்டத்தரணி ஜகத் லியனா ஆராய்ச்சி ஆகியோர் வழங்கினர்.

இக் கருத்தரங்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆய்வாளருமான க.தங்கேஸ்வரி, மட்டக்களப்பு சிவில் சமூக தலைவர் கலாநிதி பிரேம்குமார், சிவில் சமூக ஆலோசகர் மாமாங்கராஜா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதில், உள்ளூராட்சி நிறுவனங்களின் கட்டமைப்பு, உள்ளூராட்சி நிறுவனங்களின் கடமைகளும் பொறுப்புக்களும், உள்ளூராட்சியின் பொது சமூக பங்களிப்பின் முக்கியத்துவம், உள்ளூராட்சி நிறுவனங்களில் சமூக பங்குபற்றலுக்காக இருக்கும் சந்தர்ப்பங்கள், உள்ளுராட்சி நிறுவனங்களில் சமூக பங்குபற்றலை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள், ஜனாதிபதிபதியின் கற்ற பாடங்களுககான நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசுகள் மற்றும் உள்ளூராட்சி இயந்திரத்தில் அதிகாரிகள் மற்றும்; சிவில் அமைப்புக்களின் பொறுப்பு போன்ற பல தலைப்புக்களில் விரிவுரைகள் இடம்பெற்றன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .