2026 மே 02, சனிக்கிழமை

சுவிஸ் முனைப்பு நிறுவனத்தின் கர்பிணித் தாய்மாருக்கான வலுவூட்டல் உதவி

Kogilavani   / 2013 பெப்ரவரி 10 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.லோஹித், கே.எஸ்.வதனகுமார்


சுவிற்சர்லாந்து நாட்டைத் தளமாகக் கொண்டியங்கும் முனைப்பு நிதியுதவி நிறுவனமானது, ஏறாவூர் பற்றுப் பிரதேச செயலகப் பிரிவில் வதியும் 125 தாய்மாருக்கு போசாக்கு வலுவூட்டல் பொதிகளை நேற்று சனிக்கிழமை வழங்கி வைத்தது.

செங்கலடி பொதுச் சுகாதார வைத்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கர்ப்பிணித் தாய்மாரும், அண்மையில் குழந்தை பெற்ற இளம் தாய்மாரும் கலந்து கொண்டு உதவிகளைப் பெற்றுக் கொண்டனர்.

பொதுச் சுகாதார மேற்பார்வையாளர் கிருஸ்ணபிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் யு.உதயசிறிதர், ஏறாவூர் பற்று பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.வினோத், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி ரவிச்சந்தின் ஆகியோர் கௌரவ அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

முனைப்பின் வலுவூட்டல் பொதியில் குழந்தைகளுக்கான படுக்கை விரிப்பு, பற்பசை, தூரிகை, சவர்க்காரம் உள்ளிட்ட பொருட்;கள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனமானது, மட்டக்களப்பு மவட்டத்தில் அண்மையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விளிம்புநிலை மக்களுக்கு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






  Comments - 0

  • Markandu Devarajah Sunday, 10 February 2013 02:04 PM

    சுப்பர் சுப்பரா இருந்தால் சரி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .